தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். www.tneaonline.org என்ற இணையதளத்தில் பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்க 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ், தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 22- ஆம் தேதி தொடங்குகிறது; அரசுப் பள்ளி சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 22- ஆம் தேதி நடைபெறுகிறது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 29- ஆம் தேதி முதல் நடைபெறும்; மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு வரும் ஜூலை 22- ஆம் தேதியும், ஜூலை 23- ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
7.5% ஒதுக்கீட்டில் சேலம் மாணவி முதலிடம்!
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர். 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேலத்தைச் சேர்ந்த ராவணி 199.50 கட் ஆப் பெற்று முதலிடம் பிடித்தார்.


