ட்ரெண்டிங்

மார்கழி 1-ஐ முன்னிட்டு பூக்கள் வியாபாரம் ஜோர் !!!

 

சேலத்தில் இன்று மார்கழி 1ம் தேதியையொட்டி சேலம் வ.உ.சி.பூ மார்க் கெட்டில் பூக்களின் விற்பனை களைகட்டியதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி,முல்லை,ஜாதிமல்லி,காக்கட்டான்,அரளி,சாமந்தி,சம்பங்கி உள்பட பலரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்,கோவை, பெங்களூர்,சென்னை உள்பட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.கடந்த சில நாட்களாக நிலவும் பனியால் குண்டுமல்லி உள்பட பல பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது.

 

இன்று மார்கழி 1ம் தேதியையொட்டி,நேற்று பூக்களின் விற்பனை அதிகரித்தது.ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1200 என்று விற்பனை செய்யப்பட்டது.முல்லை ரூ.1200, ஜாதிமல்லி ரூ.600, காக்கட்டான் ரூ.500,கலர் காக்கட்டான் ரூ.400, மலைக்காக்கட்டான் ரூ.500, ஏற்காடு மலைக் காக்கட்டான் ரூ.300, அரளி ரூ.300, வெள்ளை அரளி ரூ.300, மஞ்சள் அரளி ரூ.320, செவ்வ ரளி ரூ.320, ஐ.செவ்வரளி ரூ.300, நந்தியாவட்டம் ரூ.80,சின்னநந்தியாவட் டம் ரூ.150, சம்பங்கி ரூ.60. சாதா சம்பங்கி ரூ.100 என விற்பனை செய்யப்பட்ட தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.