வரும் ஜூலை 23- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜூலை 22- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில், வரும் ஜூலை 23- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 7வது முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றவிருக்கிறார்.


