ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பதிவாகியுள்ளது?

 

சேலம் மாவட்டத்தில் நேற்று (அக்.16) மாலை 05.00 மணிக்கு தொடங்கிய கனமழை, பல்வேறு இடங்களில் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் சேலம் மாநகரில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தங்கியுள்ளதால், மக்கள் கடும் அவதியடைந்தனர்.

 

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக, தம்மம்பட்டியில் 82.00 மி.மீ. மழையும், மேட்டூரில் 57.40 மி.மீ. மழையும், சேலம் மாநகரில் 53.60 மி.மீ., மழையும், ஆத்தூரில் 49.00 மி.மீ. மழையும், பி.என்.பி.யில் 44.00 மி.மீ. மழையும், ஓமலூரில் 41.00 மி.மீ. மழையும், கெங்கவள்ளியில் 35.00 மி.மீ. மழையும், சங்ககிரியில் 25.00 மி.மீ. மழையும், தலைவாசலில் 21.00 மி.மீ. மழையும், எடப்பாடியில் 16.40 மி.மீ. மழையும், ஏற்காட்டில் 16.20 மி.மீ, மழையும், காடையாம்பட்டியில் 16.00 மி.மீ. மழையும், வீரகனூரில் 12.00 மி.மீ. மழையும், ஆணைமடுவு 11.00 மி.மீ. மழையும், கரியக்கோயிலில் 7.00 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.