மாற்றுத்திறனாளிகளுக்கான எடைக்குறைந்த சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
'YD One' என பெயரிடப்பட்டுள்ள இந்த சக்கர நாற்காலி மாற்றுத்திறனாளிகளின் உடற்வாக்கிற்கு ஏற்றவாறும் கையாள்வதற்கு எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சாதராண சக்கர நாற்காலியின் எடை 17 கிலோவாக உள்ள நிலையில் ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ள இந்த சக்கர நாற்காலியின் எடை 8.5 கிலோ தான். இதே நாற்காலியை வெளிநாட்டில் இருந்து வாங்கினால் ரூபாய் 2.40 லட்சம் ஆகும். இந்த சக்கர நாற்காலியை ரூபாய் 75,000- க்கு கொடுக்கிறோம்; கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் ஆகிய மெட்டீரியல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தீவிர ஆய்வு மேற்கொண்டு சக்கர நாற்காலியின் எடையை பாதியாகக் குறைத்துள்ளோம் என்று ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
இந்த சக்கர நாற்காலி எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என்பது தான் கூடுதல் சிறப்பு ஆகும்.


