சேலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 2026 குறித்து கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்,பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026 அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
மேலும் இன்றைய தினம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026 குறிப்பு கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கான,விழிப்புணர் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடைபெற்றது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.அவ்வாறு வழங்கப்பட்ட விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்து வழங்குவது குறித்தும்,தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை எடுத்துரைத்தினர் கல்லூரி பொறுப்பு அலுவலர் மாணவ,மாணவியர் கணக்கிட்டு படிவத்தில் வாக்காளர்கள் நிரப்ப வேண்டிய விவரங்கள் குறித்து வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை முக்கிய தேதிகள் குறித்தும் அது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் விவரங்கள் குறித்தும்,இக்கூட்டத்தில் கல்லூரியின் பொறுப்பு அலுவலர்களுக்கும்,மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதே போல் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மாணவ ன,மாணவியர் தங்கள் அருகில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி உரிய விழிப்புணர்வை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகள் தோறும் கணக்கெடுப்பு பணியின் போது கணக்கெடுப்பு படிவம் அளித்துள்ள அல்லது இணையவேளையில் கணக்கெடுப்பு வடிவத்தினை பூர்த்தி செய்யப்பட்டுள்ள,படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,என மாவட்ட தேர்தல் அலுவலரும்/மாவட்ட ஆட்சியர் டாக்டர்,பிருந்தாதேவி தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்,ரவிக்குமார் மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர்,செந்தில்குமார் மற்றும் கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் மாணவ மாணவிகள் என தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

-p7ZECD2pkw.jpg )
