ட்ரெண்டிங்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! 

8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (ஜூலை 05) சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தொடங்குகிறது. 

இன்று தொடங்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, வரும் ஆகஸ்ட் 04- ஆம் தேதி நடைபெறுகிறது. நடப்பு டி.என்.பி.எல். தொடர் சென்னை, சேலம், திண்டுக்கல், கோவை, நெல்லை உள்ளிட்ட 5 இடங்களில் நடக்கிறது. 

தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. தொடரின் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 50 லட்சம், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.