ட்ரெண்டிங்

சேவல் சண்டை நடத்திய 11 பேர் மீது வழக்கு!

 

அந்த வகையில், சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கல்லேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எதிரே உள்ள மாந்தோப்பில் பணத்தைக் கட்டி சேவை சண்டை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து, காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து, சேவல் சண்டையில் (சூதாட்டம்) ஈடுபட்டவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் தப்பியோடிவிட்டனர். 

 

அதன் தொடர்ச்சியாக, காவல்துறையினர் அங்கிருந்த கார் மற்றும் 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடியவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.