ட்ரெண்டிங்

குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நுழைவு, பார்க்கிங் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இன்று (செப்.06) முதல் நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்துமிடக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி, பெரியவர்களுக்கான நுழைவுக்  கட்டணம் ரூபாய் 20- லிருந்து 50 ரூபாயாகவும், ஐந்து வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் 5- லிருந்து 10 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

கேமரா, வீடியோ கேமராக்கள் பூங்காவுக்குள் கொண்டு செல்வதற்கான கட்டணம் ரூபாய் 100- லிருந்து 150 ரூபாயாகவும், இலகுரக 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் ரூபாய் 25- லிருந்து 50 ரூபாயாகவும், பேருந்து, சுற்றுலா வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் ரூபாய் 25- லிருந்து 100 ரூபாயாகவும், இரண்டு, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 10- லிருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

பூங்காவைச் சுற்றிப் பார்க்க பேட்டரி வாகனத்தில் பயணிக்க பெரியவர்களுக்கான கட்டணம் 50 ரூபாயாகவும், சிறியவர்களுக்கான கட்டணம் 30 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்காக்களில் பல்வேறு வகையான கட்டண உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நுழைவு, பார்க்கிங் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

 

சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இன்று (செப்.06) முதல் நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்துமிடக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி, பெரியவர்களுக்கான நுழைவுக்  கட்டணம் ரூபாய் 20- லிருந்து 50 ரூபாயாகவும், ஐந்து வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் 5- லிருந்து 10 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

கேமரா, வீடியோ கேமராக்கள் பூங்காவுக்குள் கொண்டு செல்வதற்கான கட்டணம் ரூபாய் 100- லிருந்து 150 ரூபாயாகவும், இலகுரக 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் ரூபாய் 25- லிருந்து 50 ரூபாயாகவும், பேருந்து, சுற்றுலா வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் ரூபாய் 25- லிருந்து 100 ரூபாயாகவும், இரண்டு, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 10- லிருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

பூங்காவைச் சுற்றிப் பார்க்க பேட்டரி வாகனத்தில் பயணிக்க பெரியவர்களுக்கான கட்டணம் 50 ரூபாயாகவும், சிறியவர்களுக்கான கட்டணம் 30 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்காக்களில் பல்வேறு வகையான கட்டண உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.