ட்ரெண்டிங்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார். 

அதில், மருத்துவத்துறைச் செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையின் முதன்மைச் செயலாளராக சந்திர மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

நீர்வளத்துறையின் செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறையின் செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, செய்தி மற்றும் டிஎன்பிஎல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.