சர்வதேச முதியோர்கள் தின விழா மூத்த குடிமக்களை கௌரவித்த மாவட்ட ஆட்சியர்.
சேலம் மாவட்டம்.ஏற்காடு அடிவாரம் நேசக்கரங்கள் ஆதரவு முதியோர் இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் இன்று (29.10.2025) நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழா-2025ல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,கலந்துகொண்டு மூத்த குடிமக்களை கௌரவித்தார்கள்.
முதியோர் தினம் என்பது நம் சமூகத்தின் மூத்த குடிமக்களுக்கான அன்பு, நன்றி மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான நாள் ஆகும். முதியோர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது மற்றும் சமூகத்தின் பொறுப்பை உறுதிப்படுத்துவது. இளைய தலைமுறையுடன் முதியோர்களின் அனுபவங்களைப் பகிர்வது, தலைமுறைகளுக்கிடையே அன்பும் புரிந்துணர்வும் வளர்ப்பது முதியோர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.
மேலும் இந்த ஆண்டு சேலம் மாவட்டம். ஏற்காடு அடிவாரத்தில் உள்ள நேசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள மூத்த குடிமக்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டது. அதேபோன்று முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சேலம் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோ.உதயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ரெ.கார்த்திகா நேசக்கரங்கள் தலைவர் திரு.செல்லதுரை, குழந்தைகள் நலக்குழு முன்னாள் தலைவர் திருமதி ஜெ.ஜெயந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

-kZY5LZDq2c.jpg )
