ட்ரெண்டிங்

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு! 

19 கிலோ எடைக் கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூபாய் 31 குறைந்து, 1,809.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த மார்ச் மாதம் ரூபாய் 1,960- க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடைக் கொண்ட சிலிண்டரின் விலை ரூபாய் 1,809.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என தொடர்ந்து 4ஆவது மாதமாக 19 கிலோ சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டரின் விலை மார்ச் முதல் ரூபாய் 818.50 ஆக நீடிக்கிறது. 

19 கிலோ சிலிண்டரின் விலை கடந்த 4 மாதங்களில் ரூபாய் 150 குறைந்துள்ளது! 

ஹோட்டல், டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைக்கொண்ட சிலிண்டரின் விலை 4 மாதங்களில் ரூபாய் 150 குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூபாய் 1,960- க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ சிலிண்டரின் விலை ரூபாய் 150.50 குறைக்கப்பட்டுள்ளது. 

19 கிலோ சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் உணவுப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதால் உணவுப்பொருள்கள் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.