ட்ரெண்டிங்

சங்ககிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !

 

சங்ககிரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் 500 க்கும் மேற்பட்டோர் பேர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் சங்ககிரி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.இந்த ஓட்ட பந்தயத்தை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனசேகரன்,கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

இந்த ஓட்டப்பந்தயமானது சங்ககிரி வித்யாசாகர் பள்ளி வளாகத்தில் தொடங்கி நாகிசெட்டிபட்டி , ஹவுசிங் போர்டு, சங்ககிரி ரயில்வே நிலையம் வரை சென்று மீண்டும் அப்பள்ளிக்கே சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓடி வந்தனர்.இப்போட்டியில் 13 வயது முதல் 55 வயதுக்கு மேல் வரை 2 பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் அனைத்து பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. 

மேலும் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.