அ.தி.மு.க.வின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அ.தி.மு.க.வின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி தி.மு.க. அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் தி.மு.க. அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் தி.மு.க. அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க.வினர் மேற்கொண்டு வரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.



-SXgDfGgJfO.jpg)