நடப்பு டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியோடு வெளியேறியது. அதேபோல், டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா அணி.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தென்னாப்பிரிக்கா அணி.
முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 56 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 57 ரன்கள் என்ற இலக்கை 8.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி எட்டிப் பிடித்தது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 23, ஹென்ட்ரிக் 29 ரன்களையும், ஜேன்சன், ஷம்சி தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்காவுடன் இறுதிப் போட்டியில் மோதப்போவது இந்தியாவா? இங்கிலாந்து அணியா? என்று இன்று இரவு தெரிந்துவிடும்.



