ட்ரெண்டிங்

பணிபுரியும் மகளிருக்கென பிரத்யேக விடுதிகள் தொடக்கம்!

பணிபுரியும் மகளிருக்கென பிரத்யேக விடுதிகள் தொடக்கம்! 

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருச்சி, வேலூர், தஞ்சாவூர், நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், சேலம் மாவட்டம், சூரமங்கலத்திற்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டியில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் இரண்டு பேர் தங்கும் அறை, நான்கு பேர் தங்கும் அறை என 64 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுதியில் இருந்து சேலம் 0.9 கிலோ மீட்டர் தொலைவில் சேலம் ரயில் நிலையமும், 5.9 கிலோ மீட்டர் தொலைவில் சேலம் புதிய பேருந்து நிலையமும், 2.8 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீ கோகுலம் பல்நோக்கு மருத்துவமனையும் அமைந்துள்ளது. 

விடுதியில் 24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச வைஃபை, டிவி, பயோ மெட்ரிக், பொழுதுபோக்கு அம்சங்கள், அயனிங் வசதி, சுத்தரிக்கரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளனர். குறிப்பாக, பெண்களுக்கான அதிநவீன வசதிகளுடன் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. 

விடுதிகளின் கட்டணம், முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு 94999- 88009, 0427-2446806 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) www.tnwwhcl.in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.