ட்ரெண்டிங்

விஷச்சாராயம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஏன்?- ஆர்.எஸ்.பாரதி விளக்கம்! 

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இ.பி.எஸ்.- க்கு எதிரான டெண்டர் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை நாங்கள் கோரவில்லை. வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. நாங்கள் அன்றைக்கும், இன்றைக்கும் சி.பி.ஐ. விசாரணையைக் கோரவில்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். 

விஷச்சாராய விவகாரத்தில் விரைவாக விசாரணை நடக்கவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு 
உத்தரவிடப்பட்டுள்ளது. ரூபாய் 570 கோடி பிடிப்பட்ட வழக்கை சி.பி.ஐ. இன்னமும் விசாரித்து வருகிறது; நிலுவையில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் நடுரோட்டில் பிடிபட்ட ரூபாய் 570 கோடி யார் பணம் என 8 ஆண்டுகளாக சி.பி.ஐ. கோரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.