விளையாட்டு

ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறாரா தினேஷ் கார்த்திக்? 

ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் விடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22- ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. 

வரும் மே 26- ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற தினேஷ் கார்த்திக் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 242 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 20 அரை சதத்துடன் 4,516 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 96 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2022- ஆம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை.