சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடந்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூன் 26) கூடிய பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடந்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை, சம வாய்ப்பை உறுதிச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2021- ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


