ட்ரெண்டிங்

கொண்டலாம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மேயர் இராமச்சந்திரன்!

சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட மணியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை பரிசோதனை செய்வதை நேரில் பார்வையிட்டனர்.

 

அதைத் தொடர்ந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தையும் வழங்கினர். இந்த முகாமில், மாநகர நல அலுவலர் யோகானந் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த சிறப்பு மருத்துவ முகாமில், கொண்டலாம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டு, உடல் பரிசோதனை செய்து, மருத்துவர்களின் அறிவுறுத்தல்களையும் கேட்டுக் கொண்டனர்.