ஆன்மிகம்

ஆருத்ரா தரிசனம்-சேலம் சுகவனேஸ்வரர்-தாரமங்கலம் கோவிலில் அபிஷேகம் !

 

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று நள்ளிரவு 12.15 முதல் காலை ஆறு மணி வரை நடராஜருக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மூலவர் சுகுணேஸ்வரருக்கு தங்க நாகாபரணம், சொர்ணாம்பிகை அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடக்க உள்ளது.தொடர்ந்து சிவகாமி அம்மன் சமூக நடராஜ பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று வழக்கமான மண்டகப் பணிகளில் சிறப்பு பூஜை செய்யப்படவுள்ளது.

அதே போல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்று நாளை காலை 10 மணிக்கு நடராஜர் அம்பாள் சிவகாமிசுந்தரிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகமும் பின் சுவாமி அம்பாளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து தீபாதாரணை நடைபெற உள்ளது.மாலையில் சுவாமி திருவிழா வரும்போது சாமியிடம் கோபித்துக் கொண்டு அம்பாள் தனி கோவிலுக்குள் வந்ததும் கோபுர கதவுகள் சாற்றப்படும்.பின் கோவிலுக்கு வரும் சுவாமி இருமுறை முறை கதவைத் தட்டி திறக்காமல் 3 ம் முறை தட்டும் போது திறக்கப்படும் கோவிலில் சுவாமிகள் நடக்கும் இந்த ஊடல் கூடல் வைபவத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.