18ஆவது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் ஒருமுறை தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். மக்களவையில் அதிகாரமிக்க பதவியான சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா தொடர்ந்து 2ஆவது முறையாகத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா. 48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா தொகுதியில் இருந்து 3ஆவது முறையாக எம்.பி.யாகத் தேர்வுச் செய்யப்பட்டவர் ஓம் பிர்லா. பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் கை குலுக்கிக் கொண்டனர். அதேபோல் சபாநாயகராகத் தேர்வுச் செய்யப்பட்ட ஓம் பிர்லாவை இருவரும் அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர்.
ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 15 தீர்மானங்கள், கே.சுரேஷுக்கு ஆதரவாக 3 தீர்மானங்களும் முன்மொழியப்பட்டன.



