ட்ரெண்டிங்

சேலத்தில் பா.ம.க.வினர் கைது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் குறித்து தரம் தாழ்ந்து பேசியதாகக் கூறி சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பா.ம.க.வினர் இன்று (நவ.26) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ம.க.வின் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரை காவல்துறையினர் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பின்னர், பா.ம.க.வினர் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனம் மூலம் சேலம் கோட்டை சூசன் அம்மாள் சமுதாய கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.