போதைப்பொருள் புழக்கம் குறித்து இங்குள்ள அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது? என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
போதைப்பொருள் பயன்பாடு, சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் புழக்கம் குறித்து இங்குள்ள அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது? தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை; கஞ்சா மட்டுமே உள்ளது என்று கூறுகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கூறுகின்றனர். பெற்றோர் உள்ளிட்டோர் கூறுவதை ஏற்காமல் போதைப்பொருள் இல்லை எனக் கூறி வருகிறார்கள். இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்தும் நாம் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


-SXgDfGgJfO.jpg)