ட்ரெண்டிங்

பெரியார் பல்கலை. விவகாரம்- அமைச்சர் பொன்முடி விளக்கம்! 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீண்டும் பதவி வகிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்; பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு இருப்பதை அந்த குழுவே ஒப்புக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.