தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ம.க.வைச் சேர்ந்த மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் சதாசிவம், மேட்டூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை பொதுமக்கள் எளிதில் சென்று தரிசனம் செய்யும் வகையில், மேட்டூரில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


