ட்ரெண்டிங்

சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை!

 

பொதுத்தேர்வில் விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அரசுத் தேர்வுகள் துறை பரிந்துரைச் செய்துள்ளது. நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களை இந்தாண்டு மதிப்பீடு பணியில் ஈடுபடுத்துவதில்லை என முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

 

தேர்வுகளைக் கண்காணிப்பது, விடை மதிப்பீடு உள்ளிட்ட எந்த பணியும் 1,000 ஆசிரியர்களுக்கு வழங்கப்படாது. இதனிடையே, பொதுத்தேர்வுகளில் முறைகேடு,சரியாக மதிப்பீடு செய்யாதவர்கள் பட்டியலைத் தேர்வுத்துறைத் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அரசுத் தேர்வுகள் துறையின் அதிரடி நடவடிக்கையால், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியின் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.