பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் முன்பதிவுச் செய்ய வேண்டாம் என பயணிகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதியில்லை; அகில இந்தியா சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும். அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபடுவர்.
தரப்பட்ட அவகாசத்தில் வெறும் 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்துள்ளன. 800 ஆம்னி பேருந்துகள் பலக்கட்ட எச்சரிக்கைகளை மீறி சட்டத்திற்கு புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை; விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in- ல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


