பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் முன்னாள் பதிவாளர் ஆகியோர் மீது விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் சேலம் மாநகர காவல்துறைக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 2.5 கோடி நிதியை முறைகேடு செய்ததாக மாணவர்கள் புகார் அளித்திருந்தனர். புகார் விசாரித்த மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு ஆகியோர் மீது விசாரணை நடத்த சேலம் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், விசாரணை அறிக்கையை வரும் ஜூலை 30- ஆம் தேதிக்குள் மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல் புகார்கள் உள்ள நிலையில், துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



-hcTFAGMRGb.jpg)