சேலம் மாவட்டத்தில் எட்டிக்குட்டைமேடு, பேளூர், தும்பிப்பாடி, அஸ்தம்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (ஜன.30) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டிக்குட்டைமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, ஏகாபுரம், தைலாம்பட்டி, ஆர்.புதூர், கோரணம்பட்டி, கோணசமுத்திரம், எட்டிக்குட்டைமேடு, சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், தெப்பக்குட்டை, இடங்கணசாலை எருமைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.30) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேளூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், குறிச்சி, பவளத்தானூர், நடுப்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, சந்துமலை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டானூர், ரெங்கனூர், கணுக்கனூர், சின்னவேலாம்பட்டி, கோணஞ்செட்டியூர், பெரியகுட்டிமடுவு ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.30) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தும்பிப்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுக்காளிப்பட்டி, தாராபுரம், சின்னத்திருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர் புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லூர், பெரிய சாத்தப்பாடி, சின்ன சாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பட்டி, எம்.என்.பட்டி, வடகம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.30) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்தம்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், அஸ்தம்பட்டி, காந்தி சாலை, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னத்திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரியபுதூர், சாரதா கல்லூரி சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, ஏற்காடு, நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் நாளை (ஜன.30) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-SXgDfGgJfO.jpg)