ட்ரெண்டிங்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு! 

26 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், வெயிலின் தாக்கமும் குறைந்துள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வினாடிக்கு 1,500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

தற்போது அணையின் நீர்மட்டம் 43.71 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 390 கனஅடியாகவும் உள்ளது.