ட்ரெண்டிங்

தமிழகத்தில் செட் தேர்வு ஒத்திவைப்பு! 

தமிழகத்தில் செட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான செட் தேர்வுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். நாளை (ஜூன் 07) முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறவிருந்த செட் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியன் சுந்தரரானார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரட்டீஸ் அறிவித்துள்ளார். 

செட் தேர்வுக்கான புதிய தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.