ட்ரெண்டிங்

வந்தே பாரத் ரயிலில் அதிக பயணிகள் பயணம் செய்து புதிய சாதனை-தெற்கு ரயில்வே பெருமிதம்!

தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிக பயணிகள் பயணம் செய்து புதிய சாதனை பதிவாகியுள்ளதாக தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் 13- ஆம் தேதி வரை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண் 20643) பயணித்தவர்களின் விகிதம் 108.23% ஆகவும், கோயம்புத்தூர்- டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண் 20644) பயணித்தவர்களின் விகிதம் 104.60% ஆகவும் உள்ளது.

 

அதேபோல், காசர்கோடு- திருவனந்தபுரம் சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண் 20633) பயணித்தவர்களின் விகிதம் 177.45% ஆகவும், திருவனந்தபுரம் சென்ட்ரல்- காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண் 20634) பயணித்தவர்களின் விகிதம் 171.76% ஆகவும் உள்ளது.

 

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்- மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண் 20607) பயணித்தவர்களின் விகிதம் 130.48% ஆகவும், மைசூரு- டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண் 20608) பயணித்தவர்களின் விகிதம் 112.99% ஆகவும் உள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.