ட்ரெண்டிங்

மின்தடை ஏன்?- மின்சார வாரியம் விளக்கம்! 

தமிழகத்தில் மின்தடை ஏன் ஏற்படுகிறது? என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; வெயிலின் தாக்கம், அவ்வப்போது ஏற்படும் பழுதுகளால் சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது; தொடர்ச்சியாக மின்தடை ஏற்படும் இடங்களை ஆய்வுச் செய்ய மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மின்தடை தொடர்பான புகார்களைத் தெரியப்படுத்த 94987- 94987 என்ற 24 மணி நேரமும் இயங்கும் சேவை மையத்தைத் தொடர்புக் கொள்ளலாம் என்று நுகர்வோர்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.