தேர்தலில் பா.ஜ.க. படுத்தோல்வி அடையும் என தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. படுத்தோல்வி அடையும்; பெரும்பான்மையைப் பெறக்கூடிய இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். பிரதமர் யார் என்பது குறித்து ஜூன் 04- ஆம் தேதி இரவு அல்லது ஜூன் 05- ஆம் தேதி முடிவு செய்வோம்.
காய்ச்சல் காரணமாகத் தான் டெல்லி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


