ட்ரெண்டிங்

உச்சத்தைத் தொட்ட கொத்தமல்லித்தழை விலை! 

சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் குறுகிய கால பயிரான கொத்தமல்லித்தழை சாகுபடி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் கொத்தமல்லித்தழையின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கட்டு கொத்தமல்லித்தழை ரூபாய் 100- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

விலை உயர்ந்துள்ளதால் ஒரு கட்டு கொத்தமல்லித்தழையை வாங்கும் மக்கள், அதை பாதியாகப் பிரித்துக் குறைந்த அளவிலேயே வாங்கிச் செல்கின்றனர். இதனால் கொத்தமல்லித்தழை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.