ட்ரெண்டிங்

தற்காலிக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

 

புதிதாகத் துவங்கப்படவுள்ள ஆத்தூர் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) தற்காலிகமாகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.

 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்ட் 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் கூடுதலாக ஒரு சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) துவங்குவதற்கு ஆணை பெறப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக துவங்கப்பட உள்ள ஆத்தூர் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு (OSC) தேவைப்படும் 13 பணியாளர்கள் மற்றும் சேலம் மாவட்டம், பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் ஒரு பணியாளரை நிரப்புதல் பொருட்டு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணியிடம் குறித்த விவரங்கள் https://salem.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை வரும் நவம்பர் 08- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்." இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.