ட்ரெண்டிங்

புயல் எச்சரிக்கை- மேலும் 3 ரயில் சேவைகளை ரத்து செய்தது!

 

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேலும் மூன்று ரயில் சேவைகளை ரத்துச் செய்தது சேலம் ரயில்வே கோட்டம்.

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டிசம்பர் 04, 05, 06 ஆகிய தேதிகளில் பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலும், டிசம்பர் 05, 06, 07 ஆகிய தேதிகளில் நாகர்கோவில்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

அதேபோல், டிசம்பர் 06- ஆம் தேதி எர்ணாகுளம்- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கு ஏற்கனவே முன்பதிவுச் செய்த பயணிகளுக்கு முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.