ட்ரெண்டிங்

நெடுஞ்சாலைத்துறை வசம் சென்ற மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச்!

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சேலம் மாவட்டத்திற்கு வந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் முன்பு நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அத்துடன், அந்த இடத்தில் கலைஞர் சிலையை வைக்க வேண்டும் என்று குடும்பத்தாரை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு ஆர்ச் அமைந்துள்ள இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை வைக்க முதலமைச்சர் சேலம் வந்திருந்த போது, மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பத்தை அழைத்து பேசியதாகக் கூறப்படுகிறது. சேலம் மாவட்ட ஆட்சியராக உள்ள கார்மேகம், ஐந்து முறை மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பத்தை அழைத்து இந்த பகுதியில் கலைஞர் சிலை வைக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

 

எனினும், இந்த குடும்பத்தார் எந்த ஒரு முடிவையும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாடர்ன் தியேட்டர்ஸ் தேசிய நெடுஞ்சாலை இடத்தில் உள்ளதாகவும், இது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று கூறியும், அந்த பகுதியில் அளவீடு செய்து குறியீட்டுச் சென்றுள்ளனர். மேலும் அந்த பகுதியில் ஒரு அறிவிப்பு பதாகைகளையும் வைத்துள்ளனர்

 

அதைத் தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பத்தின் கட்டுமான பணிக்காக உள்ள நிலம் ஒன்று கோரிமேடு பகுதியில் உள்ளது. முறையான ஆவணம், பட்டா மற்றும் பத்திரம் அனைத்தும் இவர்கள் பேரில் இருக்கும் நிலையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. நிலத்தில் சிறிய கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பிரிவு அதிகாரிகள், எந்த ஒரு முன்னறிவிப்பு அனுமதியும், பெறாமல் உள்ளே அத்துமீறி 50- க்கும் மேற்பட்ட காவல்துறையில் சென்று இடித்து இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று தெரிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர்

 

இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில், "கலைஞர் சிலை அமைக்க நாங்கள் எந்த ஒரு முடிவும் இதுவரை தெரிவிக்காததால் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அரசு அதிகாரிகள் இதுபோன்று அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு எங்களை பாதுகாக்க வேண்டும். கலைஞர் சிலை அமைக்க எங்கள் குடும்பத்தார் அதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அதற்குள் மாவட்ட ஆட்சியர் இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.