அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிப்பு!
அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டது!
ஆடித்திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆவணி முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 18) அம்மனுக்கு காலை 10.00 மணி முதல் 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, இளநீர், பன்னீர் ஆகியவைக் கொண்டும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சுமார் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு மஹா தீபாராதனையும் காட்டப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாலை 04.00 மணியளவில், மாரியம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.
அதேபோல், மாரியம்மன் கோயில் வளாகத்தில் 25 முகங்களையும், அதிக கைகளையும் கொண்ட மஹா காளியம்மன் அலங்காரமும் செய்யப்பட்டு உற்சவர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிலையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் கோயிலின் ஆடித்திருவிழா இன்றுடன் நிறைவுப் பெறுகிறது.


-SXgDfGgJfO.jpg)