ட்ரெண்டிங்

கொப்பரை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை! 

 

சேலம் மாவட்டம், ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 2,750 கிலோ கொப்பரை ரூபாய் 2.32 லட்சத்திற்கு ஏலம் போனது. 

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, கொப்பரை வரத்தும் குறைந்து விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.  கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொப்பரை உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. 

இந்த நிலையில், 33 வகையான எண்ணெய் பிழித்திறன் கொண்ட 2,750 கிலோ கொப்பரை ஏலத்திற்கு வந்திருந்தது. இதில் கொப்பரையின் தரத்தைக் கொண்டு அதிகபட்சமாக கொப்பரை கிலோ ரூபாய் 90.99- க்கும் குறைந்தபட்சமாக, கொப்பரை கிலோ ரூபாய் 65.55- க்கும் சராசரி விலையாக கிலோ ரூபாய் 89.99- க்கு விற்பனையானது. 

முதல் தர கொப்பரை உற்பத்தி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் தர கொப்பரை மட்டும் விற்பனைக்கு வந்திருந்தது. இரண்டாம் தர கொப்பரையும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூபாய் 2 குறைந்து விற்பனையானது.