ட்ரெண்டிங்

கண்ணீர் மல்க ஆசிரியருக்கு பிரியா விடை கொடுத்த மாணவிகள்! 

சேலத்தில் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று இடமாறுதல் அடைந்த ஆங்கில ஆசிரியருக்கு மாணவிகள் கண்ணீர் மல்க பிரியா விடை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், மூங்கப்பாடி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஸ்ரீராம் என்பவர் கடந்த 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவிகளின் படிப்புக்கும் பல்வேறு வகையில் உதவியுள்ளார். பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரிடத்திலும் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்துள்ளார். 

ஆசிரியர் ஸ்ரீராம் தற்போது தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று திருச்சி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டை பள்ளிக்கு இடமாறுதல் பெற்றதையடுத்து, நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது  மாணவிகள் ஆசிரியர் ஸ்ரீராமை பிரிய மனமில்லாமல் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். 

மேலும் உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணியாற்றிய ஊழியர்கள் உட்பட அனைவரும் கண்கலங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.