தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.25) வாக்காளர் தின விழிப்புணர்வு வாகனப் பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25- ஆம் நாளை தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று 14- வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளான 1950- ஆம் ஆண்டு ஜனவரி 25- ஆம் நாளினை நினைவு கூறும் வகையில், தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25- ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பெருமளவில் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கவும் அதற்கான வசதிகளை எற்படுத்துவதும் இதன் நோக்கமாகும். தேசிய வாக்காளர் தினத்தன்று வாக்காளர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டின் கருப்பொருளாக "வாக்களிப்பதே சிறந்தது. நிச்சயம் வாக்களிப்பேன்" என்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் "Nothing like Voting, I vote for sure" என்று அறிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs & VVPATs) மூலம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்க வாகனம், விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு இன்று மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்விளக்க விழிப்புணர்வு வாகனங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.
மேலும், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தினம் நிகழ்ச்சியில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர், தலைமையில் அனைவராலும் எடுக்கப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா
பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


-SXgDfGgJfO.jpg)