சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி குமரேசன்- சூர்யா. குமரேசன் விவசாயி ஆவார். இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 7- ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சூர்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். வீட்டிற்கு வந்த குமரேசன் மனைவி தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது குறித்து தலைவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவுச் செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சமபவம், அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

