ட்ரெண்டிங்

கருணை காட்டிய வருண பகவான்.....மகிழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள்!

 

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 03) அதிகாலை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சேலம் மாநகர் பகுதிகளான அம்மாப்பேட்டை, உடையாப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, பொன்னம்மாப்பேட்டை, வலசையூர், 4 ரோடு, 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வானத்தில் மேகமூட்டங்கள் ஒன்று கூட சேலம் மாநகரமே ரம்மியமாகக் காட்சியளித்தது. 

அதேபோல் சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, ஆறகளூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட இடங்களில் அதிகாலை மழை வெளுத்து வாங்கிய நிலையில், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

எதிர்பாராமல் திடீர் மழை பொலிவால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், விவசாயிகள், சேலம் மாவட்டத்திற்கு கருணை காட்டிய வருண பகவானுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.