சேலம் மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த 47-வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (மே 22) தொடங்கி, வரும் மே 26- ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுளள்து.
கோடை விழாவையொட்டி, சுற்றுலாத்துறை கலைப் பண்பாட்டு துறை சார்பில், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பரதநாட்டியம், கரகாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள், கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
ஏற்காடு அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு பிரம்மாண்ட காற்றாலை, பவளப்பாறைகள், சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை உருவங்களும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் டொனால்டு டக், மிக்கமௌஸ், டாம் & ஜெரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை முன்னிட்டு, வரும் மே 25- ஆம் தேதி காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஏற்காடு திரையரங்கம் அருகில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றவுள்ளது.


-SXgDfGgJfO.jpg)