சேலம் மாவட்டம்,இரும்பாலையில் வாலிபர் கொலை வழக்கில் ஆறு பேர் குண்டர் சட்டத்தில் கைது,மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை...
சேலம் இரும்பாலை அருகே உள்ள வேடுகாத்தம்பட்டி கோயில் திருவிழாவில் மோகன்ராஜ் என்பவருக்கும் காளியப்பன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி வீட்டில் இருந்த மோகன் ராஜ்யையும் அவரது நண்பரையும் காட்டிற்குள் கடத்தி சென்று 13-க்கும் மேற்பட்ட கும்பலை சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கினர், கத்தியால் வெட்டி உள்ளனர் இதில் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,அவரை தாக்கிய போது எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சேலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனை அடுத்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பன் தங்கராஜ் இளங்கோ சூர்யா பிரகாஷ் கவினேஷ் மற்றும் அன்பழகன் பசுபதி ஜீவா உள்பட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இவர்களில் காளியப்பன் தங்கராஜ் இளங்கோ சூர்யா பிரகாஷ் கவினேஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய இரும்பாலை இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் மாநகர தலைமையிட துணை கமிஷனர் கீதா ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரிக்கு பரிந்துரை செய்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட கமிஷனர் காளியப்பன் உட்பட ஆறு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார் அதன்படி அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
அதேபோல் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட கிச்சிபாளையம் ஆனந்த் மீது இரண்டாவது முறையாகவும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பட்டியை சேர்ந்த பிரசாந்த் மீதும் குண்டர்தடுப்பு சட்டம் பாய்ந்தது.

-(8)-qKQI62kJjN.jpg )
-SXgDfGgJfO.jpg)