ட்ரெண்டிங்

அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்!

 

சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இன்று (ஜன.13) பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்து பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுகளித்தார். 

 

மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். மியூசிகள் சேர், பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 9- வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம், பானையை உடைத்து அசத்தினார். 

 

விளையாட்டுப் போட்டிகளில் நடுவராக மேயரும், போட்டியாளர்களாக மாமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியடையச் செய்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். 

 

பானையை உடைக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம், ஆட்சியரிடம் பரிசுகளைப் பெற்றார்.