ட்ரெண்டிங்

லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி சேலம் கோயில்களில் பூஜை!

 

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டி, விஜய் மக்கள் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள், சேலம் கடை வீதியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ராஜகணபதி கோயில், சேலம் அம்மாபேட்டை சித்தேஸ்வரா காளியம்மன் திருக்கோயில், சேலம் டவுனில் உள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சேலம் அம்மாபேட்டையில் சீரடி சாய்பாபா திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

 

 

பின்னர், பக்தர்களுக்கு சுண்டல், தயிர் சாதம், பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கினர். பிரசாதத்தை லியோ திரைப்படத்தின் விநியோகஸ்தர் தைலா மூவி அரும்பு பக்தர்களுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.