ட்ரெண்டிங்

அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விபத்து! 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசுப் பேருந்து சாலையோரம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

சேலம் ஆத்தூரில் இருந்து 22-ம் எண் கொண்ட அரசுப் பேருந்து ராமமூர்த்தி நகருக்கு சென்றுக் கொண்டிருந்தது. கடம்பூர் வழியாகச் சென்ற போது, எதிரே வந்த பால் வண்டியின் மீது மோதாமல் இருக்க பேருந்தை இடது பக்கமாகத் திருப்பிய போது, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. காலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.